×

லெபனான் நாட்டில் பதுங்கியிருந்த ஹமாஸ் மூத்த தலைவர் படுகொலை: இஸ்ரேல் படைகளுக்கு ஈரான் எச்சரிக்கை

பெய்ரூட்: ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவின் துணைத் தலைவர் சலே அல்-அரூரி கொல்லப்பட்டதற்கு பலத்த பதிலடி கொடுக்கப்படும் என்று ஹிஸ்புல்லா, ஹவுதிகள், ஈரான் நாடு ஆகியன எச்சரித்துள்ளன. இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போருக்கு மத்தியில் லெபனானின் தெற்கு பெய்ரூட் பகுதியில் அமைந்துள்ள மஷ்ரஃபியாவில் ஹமாஸ் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே இஸ்ரேல் படைகள் காசா மீது கடுமையான தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஹமாஸ் தலைவர்கள் பதுங்கியிருக்கும் இடங்களை குறிவைத்து வெவ்வேறு இடங்களில் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது.

அந்த வகையில் மஷ்ரஃபியாவில் இருக்கும் ஹமாஸ் அலுவலகம் மீது இஸ்ரேல் படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவின் துணைத் தலைவர் சலே அல்-அரூரி, அல்-கஸ்ஸாம் கமாண்டர்கள் சமீர் ஃபண்டி, அசாம் அல்-அக்ரா ஆகியோர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று பாலஸ்தீன அமைப்புகள் மட்டுமின்றி ஹிஸ்புல்லா, ஹவுதி, ஈரான் ஆகியன எச்சரித்துள்ளன.

ஈரான் வெளியிட்ட அறிக்கையில், ‘எதிர்வினைக்கு அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் தயாராக இருக்க வேண்டும்’ என்று கூறியுள்ளது. ஹிஸ்புல்லாவின் தலைவர் ஹசன் நஸ்ருல்லா வெளியிட்ட அறிக்கையில், ‘லெபனான் மீதான எந்தவொரு தாக்குதலுக்கும் கடுமையான எதிர் விளைவுகள் இருக்கும்’ என்றார்.

The post லெபனான் நாட்டில் பதுங்கியிருந்த ஹமாஸ் மூத்த தலைவர் படுகொலை: இஸ்ரேல் படைகளுக்கு ஈரான் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Hamas ,Lebanon ,Iran ,BEIRUT ,Hezbollah ,Houthis ,Saleh al-Aruri ,Israel ,southern Beirut of Lebanon ,Dinakaran ,
× RELATED நீடிக்கும் இஸ்ரேல் – காசா போர்;...